
General
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்…. பதறும் தொண்டர்கள்….!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். எனவே தொடர் சுற்றுப்பயணம் காரணமாக உணவு அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரின் தொண்டர்கள் சற்று பதற்றமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.