General
பிரபல யூடியூபரிடம் உதவி கேட்ட அமைச்சர் துரைமுருகன்… வைரலாகும் கமெண்ட்….!!!
பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் தன்னிடம் உதவியென கேட்டு வரும் நபர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்து வருகிறார். இவரின் யூடியூப் வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் விவசாயி ஒருவருக்கு 1 ஏக்கர் நிலம் கொடுத்து உதவி செய்ததாக ஹர்ஷா சாய் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவின் கமெண்ட் பதிவில் அமைச்சர் துரைமுருகன், “ஐயா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா” என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட் சில நிமிடங்களிலேயே வைரலான நிலையில் துரைமுருகன் அதை டெலிவிட் செய்து விட்டார். அமைச்சர் துரைமுருகன் எப்போதும் நகைச்சுவையாக பேசுபவர். அதேபோல் தான் இந்த பதிவையும் அவர் நகைச்சுவையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.