Television
கிரடிட் கார்டை வைத்து ஆட்டம் போடும் மனோஜ்…. மீண்டும் சிட்டியுடன் மோதிய முத்து…!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தனக்கு கிடைத்த கிரடிட் கார்டு மூலம் ரோகிணிக்கு தாலி செயின் மற்றும் விஜயாவிற்கு புடவை வாங்கிட்டு வந்து கொடுத்து மனோஜ் பெருமை பேசுகிறார். அப்போது அப்பாவிற்கு என்ன வாங்கிட்டு வந்த என்று முத்து கேட்க உடனே வாட்ச் ஒன்றை எடுத்து காட்டுகிறார் மனோஜ். அதற்கு விஜயா அப்பாவுக்கு எதுக்குடா வாட்ச் என்று கேட்கிறார்.

#image_title
உடனே மனோஜ் இது அப்பாவுக்கு இல்லை எனக்கு இதோட விலை 51 ஆயிரம் ரூபாய் என்று கூறி ஷாக் கொடுக்கிறார். இருந்தும் முத்து மீண்டும் அப்பாவுக்கு என்ன வாங்குன என்று கேட்க ஒரு துண்டை எடுத்து கொடுக்கிறார் மனோஜ். இதனால் கடுப்பான முத்து மனோஜை அடிக்க போகிறார். ஆனால் அண்ணாமலை அவரை தடுத்து விடுகிறார். மேலும் தனக்கு சந்தோசம் தான் என்று கூறி விட்டு அங்கிருந்து செல்கிறார்.

#image_title
அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகிணி கிரடிட் கார்டை வைத்து கோவா டூர் போக ப்ளான் போடுகிறார்கள். அந்த சமயத்தில் சிட்டி மற்றும் சத்யா ஒரு வீட்டில் வட்டி காசு கேட்டு பிரச்சனை செய்ய அந்த வீட்டு ஓனர் முத்துவின் காரில் இருந்து இறங்கி வருகிறார். அவர் பையை மறந்து விட்டதால் முத்து அதை கொடுக்க உள்ளே செல்லும்போது சிட்டி அவர்களை மிரட்டி கொண்டிருக்கிறார்.

#image_title
உடனே முத்து அந்த ஓனரிடம் போலீசுக்கு போன் பண்ண சொல்கிறார். அதற்கு சிட்டி தாராளமா பண்ணுங்க எனக்கெந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார். உடனே முத்து இவ்வளவு நேரம் அங்கு நடந்த அனைத்தையும் வீடியோ எடுத்து விட்டதாக கூறி இப்போ போலீச கூப்பிடவா என்று கேட்கிறார். அதை கேட்டு ஷாக்கான சிட்டி வேண்டாம் என்று கூற அவனையும் சத்யாவையும் அங்கிருந்து முத்து விரட்டி விடுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.