Television
க்ரிஷை தத்தெடுக்க முடிவு செய்த முத்து மீனா…. ரோகிணிக்கு ஷாக் கொடுத்த அம்மா….!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி அவரது அம்மாவிற்கு போன் செய்து முத்து மற்றும் மீனா அங்கு வருவார்கள். அவங்க கண்ணுல க்ரிஷ் படக்கூடாது என கூறி மிரட்டுகிறார். மற்றொரு புறம் ரவி கடலைமிட்டாய் செய்கிறார். ஸ்ருதியும் மீனாவும் அதை டேஸ்ட் பார்த்து நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

#image_title
நீங்க க்ரிஷை பார்க்க போறீங்கல இதுல கொஞ்சம் எடுத்துட்டு போங்க என்று ரவி கூறுகிறார். அந்த சமயத்தில் விஜயா வர உடனே மீனா ஸ்ருதியிடம் சண்டை போடுவது போல பேசுகிறார். அதை பார்த்த சந்தோசப்படும் விஜயா இப்பதான் நீ சரியா பேசுற என்று கூறுகிறார். உடனே ரவி அவர் செய்த கடலை மிட்டாயை டேஸ்ட் பார்க்க கொடுக்கிறார்.

#image_title
அதை சாப்பிட்ட விஜயா நல்லா இருக்கு நான் பார்வதி வீட்டுக்கு தான் போறேன். அவளுக்கும் கொஞ்சம் எடுத்துட்டு போறேன் என கூறுகிறார். அதனை தொடர்ந்து க்ரிஷை பார்க்க முத்து மற்றும் மீனா செல்கிறார்கள். ஆனால் அங்கு க்ரிஷ் இல்லாததால் எங்கே என கேட்க ரோகிணியின் அம்மா ஏதோ சொல்லி சமாளிக்கிறார். பின் முத்து மற்றும் மீனா க்ரிஷை தத்தெடுப்பது குறித்து பேசுகிறார்கள்.

#image_title
அதை கேட்டு அவர் அமைதியாக இருக்க நல்லா யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க என்று கூறிவிட்டு செல்கிறார்கள். உடனே ரோகிணி அம்மா அவருக்கு போன் செய்து இதுகுறித்து கூறுகிறார். அதை கேட்கும் ரோகிணி கோபப்படுகிறார். பதிலுக்கு ரோகிணியின் அம்மாவும் உனக்கு க்ரிஷ் மீது அக்கறையே இல்ல. உன் வாழ்க்கை தான் உனக்கு முக்கியம். அவங்களாவது க்ரிஷை நல்லா பார்த்துப்பாங்க என கூறுகிறார்.