
Television
சத்யாவிற்காக நாடகம் போட்ட முத்து… சிறைக்கு சென்றதால் அதிர்ச்சியில் மீனா…???
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சரக்கு பாட்டிலுடன் வீட்டிற்கு வர அதை பார்த்து கோபமாகும் மீனா இவ்வளவு நாளா வெளிய குடிச்சிட்டு இருந்தீங்க இப்போ வீட்டுக்குள்ளயே குடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா என்று கோபப்படுகிறார்.

#image_title
உடனே மீனாவை சமாதானம் செய்த முத்து இது உண்மையான சர்ககு இல்ல. எல்லாம் சத்யாவோட ப்ரின்சிபல ஏமாத்ததான். நான் சொல்ற மாதிரி மட்டும் நீ பண்ணு என்று முத்து கூறுகிறார். மறுநாள் முத்து கூறியது போல சத்யாவின் ப்ரின்சிபல் வரும்போது நாடகத்தை ஆரம்பிக்கிறார்கள்.

#image_title
அதன்படி முத்து மீனாவை அடிக்க அதை பார்த்து பதறிய சத்யா கொஞ்ச நாள் ஒழுங்கா இருந்தீங்கனு நினைச்சேன். இப்போ என் அக்காவ அடிக்கிற அளவுக்கு வந்துட்டீங்களா என்று சண்டை போடுகிறார். அப்போது அங்கு வரும் ப்ரின்சிபல் நீ சத்யா தான? ஏன் இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் உங்க அக்காவை கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்க என்று கேட்கிறார்.

#image_title
அதற்கு சத்யா குடும்ப சூழ்நிலை சார். எங்க அப்பா இறந்துட்டாரு அதனால இவருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்குற மாதிரி ஆகிடுச்சு என்று கூறுகிறார். அதை கேட்ட ப்ரின்சிபல் இப்படி ஒரு குடும்பத்துல இருக்குற நீ கண்டிப்பா படிக்கனும். நாளைல இருந்து காலேஜுக்கு வா பரீட்சை எழுது என்று கூறுகிறார்.

#image_title
அதுமட்டுமின்றி போலீசுக்கு போன் செய்து முத்து மீது புகார் அளித்து விடுகிறார். மீனா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போலீஸ் முத்துவை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். பின் சத்யாவிடம் உண்மையை கூறி ஸ்டேஷனுக்கு சென்று மீனா பேசி பார்க்கிறார். அங்கும் முடியாததால் வேறு வழியின்றி ஸ்ருதிக்கு போன் செய்து நடந்ததை கூறி உதவி கேட்கிறார்.