Television
இனி இவங்களோட நான் வொர்க் பண்ண மாட்டேன்…. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக விலகிய பிரபலம்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் முந்தைய சீசன்கள் அளவிற்கு இந்த சீசன் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

#image_title
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது. மற்றொன்று புதிதாக களமிறக்கியுள்ள கோமாளிகள். இப்படி இந்த சீசனில் பல குறைகள் உள்ளன. இந்நிலையில் இதில் இருந்து ஒரு பிரபலம் அதிரடியாக விலகியுள்ளார்.
அவர் வேறு யாருமல்ல விஜய் டிவியின் அது இது எது மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான நாஞ்சில் விஜயன் தான். இவர் பெரும்பாலும் பெண் வேடத்தில் தான் காமெடி செய்வார். அதனாலோ என்னவோ இவரை பலரும் கலாய்ப்பார்கள்.

#image_title
தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கோமாளியாக பங்கேற்று இருந்தார். இந்த சூழலில் திடீரென இதில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அதன்படி நாஞ்சில் விஜயன் கூறியிருப்பதாவது, “நண்பர்களே, நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் இனி பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். உங்களின் ஆதரவிற்கு நன்றி” என பதிவு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அனுபவம் குறைந்த பல புதிய கோமாளிகள் இணைந்துள்ளனர்.

#image_title
அவர்கள் கூட நாஞ்சில் விஜயனை பாரபட்சம் இன்றி கலாய்த்து வந்தனர். ஒருவேளை இதன் காரணமாக கூட நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.