Connect with us
   

General

கையில் எலும்பு முறிவு…. போராடி வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா….!!!!

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீரஜ் சோப்ரா 0.01 புள்ளி வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை இழந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பதிவு செய்துள்ள நீரஜ் சோப்ரா, “கடந்த திங்கட்கிழமை, பயிற்சி மேற்கொண்டபோது எனக்கு காயம் ஏற்பட்டது. எக்ஸ்ரேவில் எனது இடது கை விரல் முறிந்திருப்பது தெரிய வந்தது. இது எனக்கு வலி மிகுந்த சவாலாக இருந்தது. எப்படியாவது இந்த தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தேன். இது இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். எனது சொந்த எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். 2024 என்னை ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நபராகவும் மாற்றி இருக்கிறது. 2025ல் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

More in General

To Top