Television
ஸ்ருதிக்கும் சேர்த்து ஸ்கெட்ச் போட்ட ரோகிணி…. விஜயா செய்த சம்பவம்..!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு விஜாயவிற்கு ஒத்தடம் கொடுப்பதற்கு தயார் செய்கிறார். அப்போது அங்கு வரும் முத்து இதெல்லாம் உனக்கு தேவை இல்லாத வேலை. எப்படியும் அவங்க உன்னை திட்டதான் போறாங்க என கூறுகிறார். அதற்கு மீனா அதுக்காக அவங்க வலியில துடிக்கும்போது அதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது என கூறிவிட்டு விஜயாவிற்கு ஒத்தடம் கொடுக்க செல்கிறார்.

#image_title
அந்த சமயத்தில் ரோகிணி விஜயாவிடம் மீனா குறித்து போட்டு கொடுத்து கொண்டிருக்கிறார். சரியாக மீனா அங்கு வர முத்து சொன்னதை போல விஜயா அவரை திட்டி அனுப்பி விடுகிறார். பின் மீனா கொண்டு வந்ததை எடுத்து தனக்கு தானே ஒத்தடம் கொடுக்கிறார். சூடு கம்மியாக இருப்பதால் சூடு பண்ணுவதற்காக கிச்சனுக்கு செல்கிறார். அப்போது மீனா பரண் மீது எதையோ தேடி கொண்டிருக்க விஜயா ஸ்டீலை தட்டி விடுகிறார்.

#image_title
இதனால் கீழே விழப்போகும் மீனாவை முத்து சரியான நேரத்தில் வந்து தாங்கி பிடிக்கிறார். ஆனால் பரண் மீது இருந்த அரிசி மாவு கோலமாவு உள்ளிட்டவை விஜயா மீது விழுந்து பார்க்கவே காமெடியாக இருக்கிறார். அவரை பார்த்து ஸ்ருதி விழுந்து விழுந்து சிரிக்கிறார். அதுமட்டுமின்றி விஜயாவை போட்டோ எடுத்து அதை சோசியல் மீடியாவிலும் போட்டு விடுகிறார்.

#image_title
இந்த விஷயத்தை ரோகிணி விஜயாவிடம் போட்டு கொடுத்து விஜயாவை ஸ்ருதிக்கும் எதிராக திருப்பி விடுகிறார். அதை கேட்டு கடுப்பான விஜயா உடனே ரோகிணியை அழைத்து கொண்டு பார்வதி வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஸ்ருதியின் அம்மாவை வரவழைத்து வீட்டில் ஸ்ருதி செய்யும் வேலைகளை கூறுகிறார். மேலும் மீனாவுடன் சேர்ந்து ஸ்ருதி ஆட்டம் போடுவதாகவும் கம்ப்ளைன்ட் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.