
Cinema
நான் அந்த விருதுக்கு தகுதியானவள் இல்லையா….??? சாய் பல்லவி ரசிகர்களால் கடுப்பான நித்யா மேனன்….!!!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் சமீபத்தில் வழங்கப்பட்டது.

#image_title
இந்நிலையில் நித்யா மேனன் ஏற்று நடித்த அந்த கேர்கடரை யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படம் தான் நன்றாக இருந்தது. சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்து சொன்ன அந்த படத்தில் சாய் பல்லவி மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்திருப்பார். எனவே அவருக்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம் என பலரும் விமர்சித்து வந்தனர்.
இப்படி உள்ள சூழலில் இதற்கு நடிகை நித்யா மேனன் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “நான் தேசிய விருதுக்கு தகுதியற்றவள் என பலர் கூறுகின்றனர். ஆனால் தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பை நான் வெளிப்படுத்தியதால் தான் எனக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.

#image_title
நான் நடித்த கதாபாத்திரம் அழுவது, சோகமாக இருப்பது அல்லது அவற்றை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக இல்லாமல் இருக்கலாம். மேலும், அழுவது, சோகமாக இருப்பது போன்ற கதாபாத்திரங்களை யார் வேண்டுமானலும் நடிக்கலாம். ஆனால் நான் மிகவும் ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிகம் விரும்புகின்றேன். ஏனென்றால் அதில் தான் மிகவும் இயல்பான நடிப்பை கொண்டுவருவது சவாலாக இருக்கும்” என கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு சாய் பல்லவியை நேரடியாக தாக்கி பேசுவது போல் உள்ளது. இருப்பினும் அவரின் ரசிகர்கள் இதற்கு என்ன சொல்வதென தெரியாமல் அப்படியே சைலன்டாகி விட்டார்கள்.