Cinema
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய நிவின் பாலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் நிவின் பாலி தமிழில் நேரம் மற்றும் பிரேம்ம ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். உண்மையில் பிரேமம் படம் மூலம் இவர் இந்திய அளவில் பிரபலமான ஹீரோவாக உயர்ந்தார். இந்நிலையில் நடிகர் நிவின் பாலி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி எர்ணாகுளம் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த நவம்பர் மாதம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நிவின் பாலி மற்றும் ஸ்ரேயா ஆகியோர் தன்னை துபாய்க்கு அழைத்து சென்றதாகவும். அங்கு என்னை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரில் நிவின் பாலி உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.