Cinema
இதில் உண்மை கிடையாது…. பாலியல் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த நிவின் பாலி….!!!
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதன்படி தன்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி துபாய் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் நிவின் பாலி கூறியிருப்பதாவது, “நான் எங்கும் ஓடி ஒளியப்போவதில்லை. இங்கு தான் இருக்கிறேன். இந்த விவகாரத்தில் உண்மைகளை கண்டறிய முயற்சிக்கும் படி வேண்டுகிறேன். இது என் கோரிக்கை மட்டுமே. ஒருவேளை முடியவில்லை என்றாலும் கவலையில்லை. நான் போராட முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவருடன் பணம் செலவிட்டு படம் செய்துள்ளேன். அதுமட்டும் தான் அவருக்கும், எனக்குமான தொடர்பு. மற்றபடி இந்த புகாரில் உண்மை இல்லை. வேண்டுமென்றே என் மீது பழிபோடுகிறார்கள்” என கூறியுள்ளார்