
General
மாநாட்டிற்காக இவ்வளவு ஏற்பாடுகளா..??? விஜய்யை பார்த்து வாய் பிளக்கும் அரசியல் கட்சிகள்…!!!
நடிகர் விஜய் அவரின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். பல தடைகளுக்கு பின்னர் மாநாடு நடத்த அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்த வேண்டும் என பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

#image_title
அந்த வகையில் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மாநாட்டில் யாராவது தவறி சென்றால் அவர்களை கண்டுபிடித்து தர ‘மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி மற்றும் மருத்துவ உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
இதுதவிர மாநாட்டிற்கு மொத்தம் ஐந்து நுழைவு வாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டில் இருந்து வெளியேறுவதற்காக 15 வாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கமாக மாநாட்டிற்கு ஒரே பார்க்கிங் வசதி தான் செய்யப்படும். ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு சுமார் 4 பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி இருந்தாலும், இந்த அளவிற்கு இதுவரை யாரும் வசதிகள் செய்திருக்க மாட்டார்கள். விஜய் இப்படி பார்த்து பார்த்து செய்திருப்பது மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.