
General
பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு… தலைவர்கள் அஞ்சலி…!!!
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் (109) பாட்டி கடந்த 1916 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக தனது 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இதுதவிர 1959 ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சியின் வார்டு உறுப்பினராகவும்,1964 ஆம் ஆண்டு காரமடை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், மாதர் சங்கத்தலைவியாகவும் இருந்துள்ளார். மேலும், கடந்த 45 ஆண்டுகளாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விவசாயிகள் கலந்துரையாடல் குழுவில் (Farmers Discussion Group) இணைந்து செயல்பட்டு வருகிறார். பாப்பம்மாள் பாட்டியின் இந்த சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாப்பம்மாள் பாட்டி உயிரிழந்தார். அவரின் மறைவை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.