Television
கோபிக்கு ஆதரவாக பேசிய பழனிச்சாமி…. முடிவில் உறுதியாக இருக்கும் ஈஸ்வரி….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இறுதிச்சடங்கு செய்வதற்காக கோபியை வேட்டி கட்டி வருமாறு அனைவரும் கூறுகிறார்கள். கோபியும் வேட்டி கட்டி வந்து இறுதிச்சடங்கு செய்ய தயாராகிறார். அதுவரை அமைதியாக இருந்த ஈஸ்வரி திடீரென ஒரு நிமிஷம் என சத்தமாக பேசுகிறார்.

#image_title
பின் கோபி இவருக்கு எந்த சடங்குமே செய்யக்கூடாது என ஈஸ்வரி கூறுகிறார். அதை கேட்டு ஷாக்கான கோபி அதெப்படி என் அப்பாவுக்கு நான் தான் செய்வேன் என கூறுகிறார். அங்கிருப்பவர்களும் மகன் தான் இதெல்லாம் செய்ய வேண்டுமென கோபிக்கு ஆதரவாக பேசுகிறார்கள். கமலாவும் தனது மாப்பிள்ளையான கோபியை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

#image_title
ஆனால் ஈஸ்வரியோ பிடிவாதமாக இருக்கிறார். அதற்கு பழனிச்சாமி நீங்க கொஞ்சம் யோசிங்க ஐயாவோட மகன் இவர் தான. இவர் தான் இறுதிச்சடங்கு செய்யனும். நம்ம குடும்ப விஷயத்தை அப்பறமா பேசிக்கலாம். இப்போ இந்த இடத்துல இதையெல்லாம் பேச வேண்டாம் என கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி அவரின் முடிவில் உறுதியாக இருக்கிறார்.

#image_title
மேலும் என் புருஷன் கூட இத்தனை வருஷமா வாழ்ந்திருக்கேன். அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுனு எனக்கு தெரியும். அவர் சாகப்போறது அவருக்கு முன்னாடியே தெரியுமோ இல்லையோ கொஞ்ச நாளாவே நான் செத்தாக்கூட கோபி எனக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூடாதுனு சொல்லிக்கிட்டே இருந்தாரு. அவருக்கு இவன் இறுதிச்சடங்கு செஞ்சா அவரோட ஆத்மா சாந்தியடையாது என உறுதியாக கூறிவிடுகிறார்.