General
வாஷிங்டனில் வாய்விட்ட ராகுல் காந்தி…. வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சீக்கியர்கள்….!!?
வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீக்கியர் ஒருவரிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்த சண்டை இந்தியாவில் ஒரு சீக்கியராக நீங்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவீர்களா? என்பதை பற்றியது. ஒரு சீக்கியராகக் கடா அணிய அனுமதிக்கப்படுவீர்களா? என்பதை பற்றியது. குருத்துவாரா செல்ல அனுமதிக்கப்படுவீர்களா? என்பதை பற்றியது இந்த சண்டை. நீங்கள் மட்டுமல்ல, எல்லா மதத்தவருக்குமானது” என கூறி இருந்தார். ஏற்கனவே ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பேசி வரும் நிலையில், இந்த கருத்து தற்போது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தை சூழ்ந்த சீக்கியர்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள