General
பரபரப்பான சாலையில் ஸ்டன்ட் செய்த நபர்கள்…. பொதுமக்கள் செய்த தரமான சம்பவம்…..!!!
சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து விளைவிக்கும் விதமாக பலர் வாகனங்களில் ஸ்டன்ட் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் தான் அதிக அளவில் வீலிங் போன்ற சாகச வேலைகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூருவில் பரபரப்பான மேம்பாலம் ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சில இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Irate public threw two scooters from a flyover for riders engaging in wheeling stunt at Nelamangala traffic limits #Bengaluru #Karnataka @alokkumar6994 pic.twitter.com/d4OfURMNm7
— Shreyas HS (@ShreyasJurno) August 17, 2024