Cinema
தூக்க கலக்கத்துல சொல்லிட்டேன்… நிவின் பாலி வழக்கில் திடீரென பல்டி அடித்த பெண்….!!!!
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த பெண் குறிப்பிட்ட அன்றைய தினம் நிவின் பாலி கேரளாவில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார் என்றும், படப்பிடிப்பில் பங்கேற்றார் என்பதற்கான ஆதாரங்களும் வெளியானது. இதனை தொடர்ந்து இதுகுறித்து அந்த பெண்ணிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர் அப்போது அந்த பெண், “விசாரணையின் போது தூக்க கலக்கத்தில் தேதியை மாற்றி கூறி விட்டதாக” தெரிவித்துள்ளார். இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பதால் நிச்சயம் அந்த பெண் பொய் புகார் தான் அளித்துள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.