Television
காசு வந்தா தான் திருமணம்… அதிரடி காட்டும் பிரதீப் ஆண்டனி…!!
விஜய் டிவியில் இறுதியாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று சக போட்டியாளர்களின் சூழ்ச்சியால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர் தான் பிரதீப் ஆண்டனி. இதுதவிர இவர் தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் தான் அவருடைய நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் நிச்சயம் முடிந்து இவ்வளவு நாளாகியும் இன்னும் திருமணம் முடியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்துள்ள பிரதீப் ஆண்டனி, “காசு வந்தால் தான் கல்யாணம் என்பதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறேன். இப்போது சின்ன சின்ன ஈவெண்ட்ஸை எடுத்து நடத்தி வருகிறேன். கண்டிப்பாக பணம் வந்த பிறகு தான் திருமணம்” என கூறியுள்ளார்.