General
விஜய் புத்திசாலி பையன்… புகழாரம் சூட்டிய பிரேமலதா விஜயகாந்த்…!!!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 71 டாட்டூ கலைஞர்களை வைத்து 71 பேருக்கு 71 நிமிடத்தில் விஜயகாந்தின் முகத்தை டாட்டூவாக போடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரேமலதாவிடம் நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேமுதிக சார்பில் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசியல் என்றால் சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும். அந்த சர்ச்சைகள் மற்றும் சவால்களை முறியடித்து தான் வெற்றி பெற வேண்டும். இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. விஜய் புத்திசாலியான மற்றும் அமைதியான பையன். நிச்சயமாக இதையெல்லாம் சமாளிப்பார் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.