Cinema
தனியார் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதம்…. இயக்குனர் சேரன் மீது காவல்நிலையத்தில் புகார்….!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சேரன் சமீபத்தில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று இடைவிடாமல் அதிக அளவு சத்தத்துடன் ஹாரன் அடித்து கொண்டே வந்துள்ளது. இதனால் கடுப்பான சேரன் தனது காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு தனியார் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன்படி பேருந்தில் இருந்த சில சிசிடிவி காட்சிகளுடன் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.