Connect with us
   

Television

குரேஷியை கலாய்த்து வீடியோ போட்ட மணிமேகலை….. பதிலடி கொடுத்த குரேஷி…!!!

பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்த சண்டை குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் குரேஷி மற்றும் ஷகிலா ஆகியோர் மணிமேகலை மீதுதான் தவறு என்பது போல் பேசியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மணிமேகலை சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை என்பது போல மறைமுகமாக பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியவர்களை தாக்கி பேசி இருந்தார். இதனை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குரேஷி அவரது சோசியல் மீடியா பக்கத்தில், “உங்க மூக்கு வரை தலையிடுவது தான் என்னோட சுதந்திரம், அதை தாண்டி மூக்கு மேல கை வைக்க கூடாது, அதை நீங்களும் maintain பண்ணிக்கோங்க” என்ற நடிகர் அஜித் பட காட்சியை பதிவிட்டு “கொஞ்சம் maintain பண்ணிக்கோங்க’ என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

More in Television

To Top