Connect with us
   

General

அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கோரிய விவகாரம்…. பொங்கி எழுந்த ராகுல் காந்தி….!!!

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரிய விவகாரத்திற்கு காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள அவர் கூறியிருப்பதாவது, “உணவக உரிமையாளரின் கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் நடத்தப்பட்டு உள்ளது. தன் கோடீஸ்வர நண்பர்கள் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளை பெற முற்பட்டால், பிரதமர் மோடி சிவப்பு கம்பளம் விரிக்கிறார். ஆனால் பண மதிப்பிழப்பு, அணுக முடியாத வங்கிகள், வரி பறிப்பு, பேரழிவு தரும் ஜி.எஸ்.டி. போன்றவற்றை சிறு வணிகர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக சிறு வணிகர்களுக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடிவாதம் புண்படுத்தப்படும் போது அவமானத்தை மட்டுமே தருவார்கள் என்பது நன்கு தெரிகிறது” என மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Continue Reading

More in General

To Top