General
என் தந்தை இறந்த வலியை மீண்டும் உணர்கிறேன்…. வயநாடு குறித்து உருகிய ராகுல் காந்தி…!!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிடராக இது கருதப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி பேசியதாவது, “வயநாடு மட்டும் இன்றி கேரளாவிள்கே இது மிகப்பெரும் சோக நிகழ்வு. எத்தனை மக்கள் வீடுகளையும் உயிர்களையும் பறிகொடுத்துள்ளார்கள் என்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. நான் எனது தந்தையை (ராஜீவ் காந்தி) இழந்த போது உணர்ந்ததை போல இன்று உணர்கிறேன். ஒட்டு மொத்த தேசத்தின் கவனமும் வயநாடு நோக்கியே உள்ளது” என கூறியுள்ளார்.