
Cinema
பிரபல நடிகர் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்… உடனடியாக வீட்டை காலி செய்த நடிகர்…..!!!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

#image_title
அந்த வகையில் பிரபல நடிகர் ஸ்ரீமன் வீட்டையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்ற நடிகர் ஸ்ரீமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இயற்கையை யாருமே கட்டுப்படுத்த முடியாது. தமிழக அரசு நல்ல பாதுகாப்பு கொடுத்தது இருந்தாலும், எவ்வளவு மழை பெய்யும் என்பது யாருக்குமே தெரியாது.
இன்று காலையில் இருந்து பெய்த மழையால், என் வீட்டிற்குள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. இதனால், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வேறு ஒரு வீட்டிற்கு செல்கிறேன். எனக்கு வேறு ஒரு இடத்தில் வீடு இருப்பதால், அந்த வீட்டுக்கு செல்கிறேன். இதே வேறு வீடு இல்லாதவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள்.

#image_title
குறை சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க வேறு எதாவது செய்திருக்கலாம். இப்போது நடந்து கொண்டு இருக்கும் வேலையை இன்னும் துரிதப்படுத்தினால், வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து அனைவரும் தப்பித்துக்கொள்ளலாம்” என கூறியுள்ளார்.