
Cinema
சூப்பர் ஸ்டார் வீட்டை சூழ்ந்த வெள்ள நீர்…. தலைவருக்கே இந்த நிலையா என பொங்கும் ரசிகர்கள்….!!!
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்து வந்த மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

#image_title
இதனால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் கார், பைக் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்று வருகிறார்கள். மேலும் இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும்பாலான திரைபிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனிலும் மழை வெள்ளம் அதன் வேலையை காட்டி வருகிறது.

#image_title
அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன்பாக மழைநீர் குட்டை போல தேங்கியுள்ளது. இதை பார்த்த அவரின் ரசிகர்கள் தலைவருக்கே இந்த நிலைமையா? என பொங்கி வருகிறார்கள். சென்னையில் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்பதால் மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.