Television
ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள்… கடைசியாக செல்வியிடம் சொன்ன அந்த வார்த்தை….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டிருக்க ஈஸ்வரி நேரமாச்சு எல்லாரும் போய் தூங்குங்க என்று கூறுகிறார். ஆனால் ராமமூர்த்தியோ இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம் என்று கூற இனியா அவருடன் போட்டோ எடுக்க கேட்கிறார். பின் மொத்த குடும்பமும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறார்கள்.

#image_title
அதனை தொடர்ந்து செல்வி அவரின் வீட்டிற்கு கிளம்ப அவரை அழைக்கும் ராமமூர்த்தி நீ பாக்யாவுக்கு எப்பவும் துணையா இருக்கணும். அவளை உன்னோட சகோதரியா, நண்பியா பார்க்குற. நீங்க எப்பவும் இப்படியே ஒன்னா இருக்கணும் என்று சொல்கிறார். அதை கேட்ட செல்வி அக்கா தான் எங்களுக்கு துணையா இருக்காங்க. இதுவரைக்கும் இல்லாத வகையில் இன்னைக்கு என்ன இப்படி பேசுறீங்க? வயசானதும் அட்வைஸ் கூடுது என கிண்டல் செய்துவிட்டு கிளம்புகிறார்.

#image_title
பின் அனைவரும் தூங்க செல்கிறார்கள். அந்த சமயத்தில் அமிர்தா நிலாவிற்கு சாப்பாடு ஊட்டுவதற்காக பாக்கியா கொடுத்த பையை திறக்க அதில் பணம் இருக்கிறது. அதை பார்த்து ஷாக்காகிறார். அதற்கு எழில் அம்மா தான் வச்சிருப்பாங்க. அவங்க அக்கவுண்ட்ல போட்டு விடு என்று சொல்கிறார். ஆனால் அமிர்தாவோ அப்படி செய்தால் அம்மா மனசு கஷ்டப்படும். அதனால இந்த பணத்தை நானே வச்சுக்கிறேன் என கூறுகிறார்.

#image_title
இறுதியாக ராமமூர்த்தி தூக்கம் வராமல் எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு நெஞ்சை தடவி கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி தூங்குவதை பார்த்து சந்தோசப்படுகிறார். நாளைய எபிசோடில் அவர் இறப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.