General
வேகமாக பரவும் குரங்கம்மை… உலக சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை…!!!
காங்கோ நாட்டில் இருந்து உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை மெல்ல மெல்ல 100 நாடுகளுக்கு குரங்கம்மை நோய் பரவி இருப்பதாகவும், உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு வேகமாக பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை நோய் பாதிப்பு மட்டுமின்றி உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும் என்பதால், அவசர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் குரங்கம்மை நோயினால், 13 நாடுகளில் 14,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 524 பேர் உயிரிழந்துள்ளனர். அதபோல் கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு குரங்கம்மை நோய் தொற்று பரவல் 160% அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.