
Television
முத்து போனை எடுத்து மாட்டிக் கொண்ட ரோகிணி…. ரவிக்கு ஷாக் கொடுக்கும் மாமியார்….!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா பணத்தை திருடியது தெரிந்தும் இந்த முத்து அதை மறைச்சிருக்கான். இந்த வீடியோ மட்டும் கிடைச்சா போதும் பிஏ விஷயத்தை சிட்டி பார்த்துப்பான் இவங்களும் க்ரிஷை தத்தெடுக்க மாட்டாங்க என ரோகிணி ப்ளான் செய்து முத்து போனை எடுக்க முயற்சி செய்கிறார்.

#image_title
அந்த சமயத்தில் முத்து போனை சார்ஜ் போட்டு விட்டு குளிக்க செல்கிறார். அப்போது ரூமுக்குள் வரும் ரோகிணி போனை எடுத்து பார்த்து கொண்டிருக்கும்போது முத்து அங்கு வந்து விடுகிறார். இதனால் ரோகிணி பயந்து கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்கிறார். பின் அந்த போனில் இருக்கும் வீடியோவை பார்த்து சந்தோசப்பட்டு அவரின் போனுக்கு வீடியோவை அனுப்ப முயற்சி செய்கிறார்.

#image_title
அதற்குள் போன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடுகிறது. மேலும் முத்து மற்றும் மீனா இருவருமே ரூமுக்குள் வந்து விடுகிறார்கள். பின்னர் முத்து மீனாவை தனக்கு சாப்பாடு ஊட்டிவிட சொல்லி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த ரோகிணி கடுப்பாகிறார். பின் முத்து அவரின் போன் எங்கே என தேட மீனாவும் சேர்ந்து தேடுகிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரோகிணி போனை வைத்துவிட்டு ரூமை விட்டு வெளியே வந்து மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார்.

#image_title
மற்றொரு புறம் ரவி அவரின் பாஸ் மகளுடன் சேர்ந்து ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்க செல்கிறார். அங்கு ஸ்ருதியின் அம்மாவும் வருகிறார். அவர் ரவி வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து ஷாக்காகிறார். அங்கு அவரை பார்க்கும் ரவி தனது பாஸ் மகளிடம் இவங்க தான் என் மாமியார் என்று அறிமுகம் செய்து வைக்கிறார். ரவி பேசிவிட்டு சென்றதும் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதிக்கு போன் செய்கிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.