
Television
சிட்டி சொன்ன விஷயம்… முத்துவிடம் நேரடியாகவே சவால் விட்ட ரோகிணி…!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டியிடம் உதவி கேட்டு சென்ற ரோகிணியிடம் சிட்டி பதிலுக்கு உதவி கேட்கிறான். அதன்படி உங்க மாமியார் பணத்தை திருடியது சத்யா தான். அந்த விஷயம் முத்துவுக்கும் தெரியும். அவன்கிட்ட இருக்குற வீடியோவ நீங்க சோசியல் மீடியால போடனும். அப்படி செஞ்சா உங்கள ப்ளாக் மெயில் பண்றவன் இனி உங்க கிட்டவே வரமாட்டான் அதுக்கு நான் கியாரண்டி என கூறுகிறார்.

#image_title
அதனை தொடர்ந்து வீட்டிற்கு வரும் ரவி மற்றும் ஸ்ருதி மீனா தலையில் அடிபட்டு இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க வாழைப்பழ தோல் வழுக்கி விழுந்து விட்டதாக கூறுகிறார். அப்போது அங்கு வரும் அண்ணாமலை என்கிட்ட ஸ்கூட்டில இருந்து கீழ விழுந்ததா சொன்ன உண்மைய சொல்லு எப்படி அடிபட்டது என கேட்கிறார். அதற்கு முத்து ஏதோ சொல்லி சமாளிக்கிறார்.

#image_title
அதனை தொடர்ந்து வீட்டிற்கு வரும் ரோகிணி மீனா தலையில் கட்டு இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்கிறார். பின் தான் கோவிலுக்கு சென்றதாகவும் அங்கு சாமியாரை பார்த்ததாகவும் அவர் சொன்னது சரியாக தான் இருக்கிறது எனவும் கூறினார். உடனே விஜயா அப்படி அந்த சாமியார் என்ன சொன்னார் என்று கேட்கிறார். உங்களுக்கு நல்ல காலம் பொறந்திருப்பதாக கூறினார்.

#image_title
மேலும் முத்து மற்றும் மீனாவிற்கு கெட்ட நேரமாம். அவர் சொன்னபடியே மீனா தலையில் அடிபட்டிருக்கு என கூற முத்து காக்காவை விரட்டுவது போல ரோகிணியை கிண்டல் செய்கிறார். அதற்கு ரோகிணி அந்த காக்காவை சீக்கிரமே விரட்டிடலாம் முத்து என நேரடியாகவே அவரிடம் சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.