
Television
விஜயாவுக்கு கிஃப்ட் கொடுத்து ஐஸ் வைக்கும் ரோகிணி…. வித்யா கொடுத்த ஷாக்…!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி கொலு பூஜைக்காக ஸ்பெஷலா ஏதோ டிஸ் பண்றாரு. ஸ்ருதி அவருக்கு ஹெல்ப் பண்றாங்க. அப்போ ரோகிணியும் மனோஜும் ஷாப்பிங் முடிச்சிட்டு வர்றாங்க. விஜயா எங்க போய்ட்டு வர்றீங்கனு கேட்க ஷாப்பிங் போயிட்டு வர்றதா சொல்லிட்டு விஜயாவுக்காக ஒரு புடவையும் எடுத்து கொடுக்குறாங்க. அதை பார்த்து விஜயா அப்படியே சந்தோசத்துல மெய்மறந்து போறாங்க.

#image_title
அந்த சமயத்தில் மீனா கொலுவுக்காக ஏற்பாடு செஞ்சுட்டு இருக்காங்க அப்போ மீனாவுக்கு தெரிஞ்சவங்க கொலுவுக்கு வர்றாங்க. உடனே மீனா அவங்கள உள்ள கூட்டிட்டு வந்து பேசிட்டு இருக்காங்க. உடனே விஜயா வந்து யாரு இவங்கலாம் என்று கேட்க மீனாவுக்கு தெரிஞ்சவங்க ஆண்ட்டி என்று ரோகிணி கூறுகிறார். உடனே வழக்கம்போல விஜயா அவங்கள அவமானப்படுத்தி பேசுறாங்க.

#image_title
அடுத்ததா மீனா ஒரு கிஃப்ட் பாக்ஸ் கொடுத்து அதை விஜயாவ ஓப்பன் பண்ண சொல்றாங்க. ஆன்லைன்ல கோர்ஸ் சொல்லி கொடுக்க போறதாவும் அதை நீங்க தான் திறந்து வைக்கனும்னு சொல்லி விஜயா ஐஸ் வைக்கிறாங்க. அப்புறம் ரோகிணியும் வித்யாவும் இன்னைக்கு எப்படியாவது முத்துவோட போனை எடுக்கனும்னு ப்ளான் போடுறாங்க.

#image_title
அதுக்கேத்த மாதிரி எதோ டான்ஸ் ப்ரோகிராம் ப்ளான் பண்ணதா ரோகிணி சொல்ல வித்யாவும் நல்ல ஐடியாவா இருக்கு என்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது முத்து போனை எடுக்கனும் என ரோகிணி கூறுவதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. நாளைய ப்ரோமோவில் முத்து போன் கிடைத்ததும் முத்துவும் மீனாவும் இப்பதான் சந்தோசமா இருக்காங்க இந்த சமயத்துல வீடியோ ரிலீஸ் பண்ணனுமா என வித்யா கேட்க ரோகிணி ஷாக்காகிறார்.