
Television
முத்து போனை எடுத்து சிக்கிய ரோகிணி…. கோபத்தில் சண்டை போட்ட முத்து…!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் பேசி கொண்டிருக்கும் போது ஸ்ருதியின் அம்மா வருகிறார். அவரை பார்த்ததும் விஜயா ஓடி சென்று வரவேற்கிறார். பின் சம்மந்தி வரலையா என்று கேட்க முத்து வழக்கம் போல அவருக்கு வேலை இருக்கும் என்று கிண்டல் செய்கிறார். அதை கேட்டதும் ஸ்ருதி அம்மா கடுப்பாகிறார்.

#image_title
அதற்கு விஜயா விடுங்க சம்மந்தி அவன் எப்பவும் இப்படி தான். அவங்களுக்கு உங்க மேல பொறாமை என்று ஏற்றி விடுகிறார். பின் அங்கு வரும் ஸ்ருதி நான் உங்க ரெண்டு பேரையும் தான வர சொன்னேன் அப்பா எங்க என்று கேட்கிறார். மேலும் ரவி உங்க அப்பாவுக்கு இங்க வர விருப்பம் இல்லையா? ஏன் அவாய்ட் பண்றாரு என்று கேட்கிறார். அந்த சமயத்தில் ரோகிணி கோலாட்ட குச்சிகளை கொண்டு வருகிறார்.

#image_title
அதை பார்த்த அனைவரும் என்ன இது என்று அதுபற்றி பேசுகிறார்கள். இதை பயன்படுத்தி வித்யா முத்துவிடம் நீங்க டான்ஸ் ஆடுங்க நான் வீடியோ எடுக்குறேன் என்று சொல்லி அவரின் போனை வாங்குகிறார். உடனே ரோகிணி வித்யாவை கிச்சனுக்கு அழைத்து சென்று வீடியோவை அப்லோட் செய்ய முயல்கிறார். அந்த சமயத்தில் சரியாக மீனா மற்றும் முத்து விளையாடி கொண்டே வந்து ரோகிணி மீது இடிக்க போன் கீழே விழுந்து விடுகிறது.

#image_title
எனவே இருவரும் ஷாக்காகிறார்கள். பின் முத்து இது என் போன் தான உன்கிட்ட எப்படி வந்துச்சு என்று கேட்க. டான்ஸ் வீடியோ பார்க்க வாங்கியதாக ரோகிணி கூறி சமாளிக்கிறார். இருப்பினும் போன் உடைந்ததால் முத்து கோபப்படுகிறார். தானே சரிசெய்து தருவதாக ரோகிணி கூற பரவாயில்லை நானே பார்த்துக்குறேன் என்று முத்து கூறிவிடுகிறார். அடுத்ததாக ரோகிணியின் அம்மா மற்றும் க்ரிஷை முத்துவும் மீனாவும் கொலுவிற்கு அழைத்து வருகிறார்கள். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.