
Television
முத்துவை மாட்டிவிட ப்ளான் போட்ட ரோகிணி…. சரியான நேரத்தில் காப்பாற்றிய மீனா….!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜுக்கு மொட்டை கடுதாசி போட்டது யார் என்று கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என முத்து சவால் விடுகிறார். அதை கேட்டு ஷாக்காகும் ரோகிணி அவர் தோழி வித்யாவை வைத்து முத்துவை சிக்கலில் மாட்டி விட பிளான் போடுகிறார். ஆனால் வித்யாவோ முத்துக்கிட்ட மாட்டுனா அவ்ளோதான் என பயந்து மறுக்கிறார். ஆனால் ரோகிணி நீ எனக்காக இதை செஞ்சு தான் ஆகனும் என கூறி அவரை வற்புறுத்த அவரும் சரி என்று சம்மதிக்கிறார்.

#image_title
மற்றொரு புறம் முத்து மனோஜ் சொன்ன கோவிலுக்கு சென்று அந்த சாமியார் யார் என்று தேடுகிறார். அப்போது முத்துவிற்கு தெரிந்த ஒரு நபர் என்ன இந்த பக்கம் என்று கேட்க சாமியார் பற்றி முத்து கூறுகிறார். உடனே இந்த சாமியாரானு பாரு இப்பதான் போலி சாமியார்னு சொல்லி மக்கள் அடிச்சு இழுத்துட்டு போனாங்க என கூறி வீடியோ ஒன்றை காட்டுகிறார்.

#image_title
அதை பார்த்ததும் பிஏ தினேஷ் என்பதை முத்து கண்டுபிடித்து விடுகிறார். பின் முத்துவிற்கு போன் செய்யும் வித்யா சவாரிக்கு அழைக்கிறார். முத்துவும் அவரை ஏற்றி செல்கிறார். அப்போது வித்யா வேண்டுமென்றே அவரின் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு என் போனில் சார்ஜ் இல்ல உங்க போனை கொஞ்சம் தர முடியுமா என கேட்கிறார். உடனே முத்துவும் கொடுத்து விடுகிறார்.

#image_title
அதில் சத்யா வீடியோவை பார்த்த வித்யா அவருக்கு ஷேர் செய்ய முயல்கிறார். அந்த சமயத்தில் சரியாக மீனா போன் செய்கிறார். உடனே முத்து அது என் பொண்டாட்டி தான். அவளுக்கு தான் நான் இந்த ரிங்டோன் வச்சிருக்கேன் என கூறி போனை வாங்கி விடுகிறார். முத்து போன் பேசி முடிப்பதற்குள் வித்யா இறங்க வேண்டிய இடம் வந்து விடுவதால் அவர் இறங்கி விடுகிறார். பின் ரோகிணிக்கு போன் செய்து நடந்ததை கூற அவர் கடுப்பாகிறார். மேலும் தினேஷ் தான் கடுதாசி போட்டார் என்பதை முத்து கண்டுபிடித்த விஷயத்தையும் வித்யா கூற ரோகிணி அதிர்ச்சியடைகிறார்.