
Television
விஜயாவை நோஸ் கட் செய்த ஸ்ருதி…. பாலில் தூக்க மாத்திரை கலந்த ரோகிணி….!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க ரவி ஸ்ருதியை சமாதானம் செய்து அழைத்து வருகிறார். அதை பார்த்த விஜயா ரவி மீது கோபப்படுகிறார். மேலும் ஸ்ருதியிடம் போகாத போகாதனு சொல்லியும் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம போய்ட்டே இருக்க.

#image_title
புருஷன் பொண்டாட்டினா சண்டை வரத்தான் செய்யும். என்கிட்ட சொல்லி இருந்தா நான் பேசி சரி பண்ணிருப்பேன் என விஜயா கூறுகிறார். அதற்கு ஸ்ருதி நீங்க ஜர்ட்ஜா? என்று கேட்க உடனே முத்து பலகுரலுக்கு செம தைரியம் இப்படி முகத்துக்கு நேரா பேசிடுச்சு என்று புகழ்கிறார். அதை பார்த்து விஜயா கடுப்பாகிறார்.

#image_title
உடனே ஸ்ருதி நான் கோவிச்சிட்டு வீட்டை விட்டு போகல. லீவு போட சொல்லி அவன் போடல. அதான் என்னை தேடி வரட்டும்னு அம்மா வீட்டுக்கு போனேன். அவனும் வந்து என்னை சமாதானம் பண்ணான். இங்க பாருங்க எனக்காக டைமண்ட் ரிங் வாங்கிட்டு வந்தான் என்று ரவி வாங்கி கொடுத்த மோதிரத்தை காட்ட விஜயா ரவியை முறைக்கிறார்.

#image_title
பின் ரவியை தனியாக அழைத்து நான் தான் உன்னை அங்க போகாதனு சொன்னேன்ல என்று திட்ட ரவியோ மீனா அண்ணி தான் போன் பண்ணி ஸ்ருதிய சமாதானம் பண்ண சொன்னாங்க என்று கூறுகிறார். உடனே விஜயா மீனாவை திட்டுகிறார். அப்போது முத்து மற்றும் அண்ணாமலை அங்கு வந்து விஜயாவை கலாய்க்கிறார்கள்.

#image_title
அடுத்ததாக மீனா கிச்சனில் முத்துவிற்காக பால் காய்ச்சி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ரோகிணி மீனாவின் கவனத்தை திசை திருப்பி விட்டு அந்த பாலில் தூக்க மாத்திரையை கலக்கிறார். பின் இருவரும் தூங்கும் வரை அவர்களை நோட்டமிடுகிறார்