
Television
முத்துவை குடிக்க வைக்க திட்டம் போடும் ரோகிணி…. இந்த முறையும் மீனா காப்பாற்றுவாரா….???
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் மீனா செல்ஃபி எடுத்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகிணி நான் போட்டோ எடுத்து தருகிறேன் என்று கூறி போனை வாங்க முயற்சி செய்கிறார். ஆனால் முத்துவோ நாங்களே எடுத்து கொள்கிறோம் என்று மறுத்து விடுகிறார்.

#image_title
உடனே இந்த தடவையும் போனை எடுக்க முடியாமல் போய் விட்டது என்று ரோகிணி கடுப்பாகிறார். அப்போது அந்த பிசினஸ் மேன் அங்கு வர மனோஜ் பொக்கே கொடுத்து அவரை வரவேற்கிறார். பின் அவரை தன் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

#image_title
அப்போது விஜயா டான்ஸ் அகாடமி வைத்திருப்பதாக ரோகிணி கூறுகிறார். அதை கேட்ட பார்வதி உன்கிட்ட படிக்கிறதே 10 பசங்க தான். அதுக்கு பேரு அகாடமியா என கேட்கிறார். அதற்கு விஜயா ஒருவேளை அப்படி கூட ஒரு பேரு இருக்குமோ என்னவோ விடு என்று கூறுகிறார்.

#image_title
பின் முத்துவை பார்த்து நீங்க எப்படி 50 கார் வச்சு சமாளிக்கிறீங்கனு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு. ரொம்ப பெரிய விஷயம் என்று பாராட்டுகிறார். உடனே முத்துவும் எஸ் எஸ் என்று கூறி சமாளிக்கிறார். அதன் பின்னர் மீனா பூந்தோட்டம் வைத்திருப்பதாக கூறி அவர் பங்குக்கு பிட்டு போடுகிறார்.

#image_title
அடுத்ததாக ரவியை சந்திக்கும் பிசினஸ் மேனிடம் தனியாக ரெஸ்டாரெண்ட் வைத்திருப்பதாக கூறி ரவியும் சமாளிக்கிறார். பின் கேக் வெட்டுகிறார்கள். அப்போது பேசும் அந்த பிசினஸ் மேன் உங்க குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் உங்களுக்கு ஒரு கிஃப்ட் குடுக்க போறேன் என்று கூறுகிறார்.

#image_title
எல்லோரும் என்ன என்று ஆவலாக பார்க்க தான் புதிதாக தொடங்க உள்ள பிசினஸ் டீலர் ஷிப்பை மனோஜுக்கு கொடுக்க போவதாக கூறுகிறார். அதை கேட்டு அனைவரும் சந்தோசப்படுகிறார்கள். பின் பார்ட்டி தொடங்குகிறது. முத்துவை குடிக்க விடாமல் வீட்டுக்கு அழைத்து செல்ல மீனா முயற்சி செய்கிறார். அதே சமயம் ரோகிணியும் அவரின் போனை எடுக்க திட்டம் போடுகிறார்.