Television
மீண்டும் ஜீவாவை வைத்து பிரச்சனை செய்த ரோகிணி….. செல்வத்திற்கு முத்து பணம் கொடுத்தாரா…???
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வம் அப்பா அம்மாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு முத்து பணம் தருவதாக கூறி தர முடியாததால் என்ன செய்வதென தெரியாமல் அவரின் நண்பர்களிடம் பேசி கொண்டிருக்கிறார். அப்போது அவர்களிடம் இருக்கும் பணத்தை கலெக்ட் செய்து ஒரு ஆறாயிரம் ரூபாயை தருகிறார்கள்.

#image_title
மற்றொருபுறம் வித்யா ரோகிணிக்கு போன் செய்து ஹவுஸ் ஓனர் பணம் கேட்பதாக கூற ரோகிணி மனோஜிடம் சென்று என் பிரண்ட்டுக்கு அவசரமா ஒரு லட்சம் வேணும். நாளைக்கே குடுத்துருவா குடு என்று சொல்லி கேட்கிறார். ஆனால் மனோஜ் முடியாது என்று கூறுகிறார். அதை கேட்டு கடுப்பான ரோகிணி எனக்காக தரமாட்டியா என்று கேட்க முடியவே முடியாது எனக்கு யார் மேலயும் நம்பிக்கை இல்லை என கூறி விடுகிறார்.

#image_title
இதனால் கோபமடைந்த ரோகிணி அப்போ எந்த நம்பிக்கைல அந்த ஜீவா கிட்ட மட்டும் 27 லட்சத்தை குடுத்த என கேட்டு சண்டை போடுகிறார். அதற்கு மனோஜ் என்ன ரோகிணி இப்படிலாம் பேசுற நான் ஜீவா கிட்ட ஏமாந்ததால தான் இப்போ வரைக்கும் யாரையும் நம்பி பணம் குடுக்கறதில்லை என கூறுகிறார். அதற்கு அப்படினா என்னை கூட நம்ப மாட்டியா என்று கேட்டுவிட்டு ரோகிணி அங்கிருந்து செல்கிறார்.

#image_title
பின் ரவி மற்றும் மனோஜ் மாடிக்கு வர முத்து தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறார். ரவி என்னாச்சு என்று கேட்க முத்து நடந்ததை கூறி உன்கிட்ட எதாவது பணம் இருக்குமா என்று கேட்கிறார். அதற்கு ரவி மீனா அண்ணி சொல்றதும் சரி தான். பிரெண்டுக்கு பணம் குடுக்கலாம் ஆனா அவங்க திருப்பி தரலைனா? அதனால எனக்கென்னமோ கடனுக்கு வாங்கி குடுத்தா அவங்க ஒழுங்கா கட்டுவாங்கனு தோணுது என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.