
Television
முத்து மற்றும் மீனாவை அசிங்கப்படுத்திய ரோகிணி அம்மா… சந்தோசத்தில் விஜயா….!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் மீனா அழைத்ததால் ரோகிணியின் அம்மா க்ரிஷை அழைத்து கொண்டு கொலு பூஜைக்கு வருகிறார். பின் க்ரிஷுக்கு முத்துவும் மீனாவும் சேர்ந்து கிருஷ்ணர் வேடம் போட்டு விடுகிறார்கள்.

#image_title
அந்த வேடத்தில் க்ரிஷை பார்த்ததும் அனைவரும் சந்தோசப்படுகிறார்கள். பூஜை செய்து சாமி கும்பிட்ட பின்னர் மீனா க்ரிஷிடம் பிரசாதத்தை கொடுத்து அனைவருக்கும் கொடுக்க சொல்கிறார். அப்போது க்ரிஷ் ரோகிணிக்கும் கொடுக்க உணர்ச்சிவசப்பட்ட ரோகிணி க்ரிஷை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

#image_title
அந்த சமயத்தில் மனோஜ் என்னாச்சு ரோகிணி இப்படி எமோஷ்னலாகிட்ட என்று கேட்க உடனே விஜயா டேய் ரோகிணிக்கு கரு உண்டாகி தங்காம போச்சுல அது நியாபகம் வந்திருக்கும் என்று கூறுகிறார். உடனே ரோகிணியும் ஆமாம் என்று சொல்லி சமாளிக்கிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் க்ரிஷை கொஞ்சி கொண்டிருக்கிறார்கள்.

#image_title
அப்போது ரோகிணி அவர் அம்மாவிடம் ஜாடையிலேயே ஏதோ சொல்கிறார். உடனே ரோகிணியின் அம்மா முத்து மற்றும் மீனாவை திட்ட தொடங்குகிறார். சும்மா சும்மா என் பேரனை தத்தெடுக்க போறேன்னு சொல்றீங்க. அவன் ஒன்னும் யாரும் இல்லாத அனாதை இல்லை. பாட்டி நான் இருக்கேன். அம்மா இருக்கா. தேவையில்லாம அவன் மனசுல ஆசைய வளக்காதீங்க. இனிமே எங்கள பார்க்க வராதீங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதை பார்த்த ரோகிணி மற்றும் விஜயா சந்தோசப்படுகிறார்கள்.