
General
இவை அனைத்துமே அரசியல் ஆதாயத்திற்காக தான்… சந்திர பாபு நாயுடுவை விமர்சித்த ரோஜா…!!!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா அவரின் கருத்துக்களை கூறியுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது, “ஆந்திர மாநில முதல்வர் பொறுப்பில் இருப்பவர் சந்திரபாபு நாயுடு. இப்படி முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் லட்டு விவகாரத்தில் தவறு நடந்ததா? இல்லையா? என விசாரிக்காமல் எந்தவொரு சாட்சியும் இல்லாமல் இந்த புகாரை கூறியுள்ளார். எனவே ஜெகன்மோகன் ரெட்டி மீது பழி சுமத்த வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் இதை செய்துள்ளார் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. லட்டு சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். உச்ச நீதிமன்ற விசாரணையில் நிச்சயம் சந்திரபாபு நாயுடு பொய்கள் தெரிய வரும். அப்படி உண்மைகள் தெரிய வரும் போது பொய் சொன்னவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.