Connect with us
   

General

விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்… சமூக ஆர்வலர் புகாரால் வெடித்த சர்ச்சை…!!!

நடிகர் விஜய் நேற்று அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை அறிமுகம் செய்ததில் இருந்தது பிரச்சனை மேல் பிரச்சனை வெடித்து வருகிறது. அந்த வகையில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் இந்திய குடியரசு தூதரகம், ஸ்பெயின் தூதரகம் மற்றும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறம், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறம் மற்றும் ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூ ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனவே ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

Continue Reading

More in General

To Top