
Cinema
ஸ்ருதிகா பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த சல்மான் கான்…. இந்த சீசன் வின்னர் ஸ்ருதிகா தான்….!!!!
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ மற்றும் தித்திக்குதே உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா. இவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு கிடைக்காததால், சினிமாவில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

#image_title
அதன் பின்னர் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிகா குடும்பம் குழந்தை என மொத்தமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அந்த சமயத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவின் வெகுளித்தனமான பேச்சால் தனக்கென தனி ரசிகர்ளை அவர் உருவாக்கி வைத்தார். அவரின் நகைச்சுவையான பேச்சிற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்த சூழலில் தற்போது ஸ்ருதிகா ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
அப்போது நடிகர் சல்மான் கான் ஸ்ருதிகாவை அறிமுகம் செய்தபோது தமிழில் பிரபல சமையல் நிகழ்ச்சியின் வின்னர் தான் இந்த ஸ்ருதிகா என கூறி அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து சல்மான் கானிடம் பேசிய ஸ்ருதிகா நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லட்டுமா? அந்த ஷோவுக்கு முன்பு நான் கிட்டத்தட்ட நான்கு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.

#image_title
ஆனால், அந்த நான்கு படமும் பிளாப் ஆகிவிட்டது என சிரித்துக் கொண்டே கூற சல்மான்கான் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார். மேலும் அங்கிருந்த ஒட்டுமொத்த ஆடியன்ஸும் சிரிக்க அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. ஆரம்பத்தில் ஸ்ருதிகா பேசுவதை போலித்தனமாக இருப்பதாக கூறி விமர்சித்த ஹிந்தி ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல அவரின் வெகுளித்தனத்தை ஏற்று கொண்டனர். தற்போது அவருக்கு தான் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.