General
இது சசிகுமாரின் வயலும் வாழ்வும்…. நடவு பணியில் ஈடுபட்ட சசிகுமார்…!!!
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுடன் வலம் வரும் சசிகுமார் மண்சார்ந்த படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான கருடன் படத்தில் இவரின் கேரக்டர் பாராட்டை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் சசிகுமாரின் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதாவது சசிகுமார் தனது சொந்த கிராமத்தில் உள்ள தன் நிலத்தில் நடவு பணி தொடங்கி இருப்பதாக கூறி விவசாயிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தான் அவை. படங்களில் மட்டுமின்றி நிஜத்திலும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சசிகுமாரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.