Connect with us
   

General

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் வார்த்தையை மாற்றிய சீமான்… வைரலாகும் பாடல்….!!!!

தமிழக ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த இந்தி விழாவிற்கு ஆளுநர் ரவி தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து விழா இறுதியில் கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்து விட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பினார்கள்.

#image_title

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் ஆளுநருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த பஞ்சாயத்து ஒருபுறம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழர் நல் திருநாடும் என்ற வார்த்தையை சேர்த்து ஒலிபரப்பி உள்ளனர்.

தற்போது இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.

Continue Reading

More in General

To Top