
General
இதுக்கு பேர் தான் தியாகமா…??? செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து விமர்சித்த சீமான்…!!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், “உன் தியாகம் பெரிது அதனினும் உன் உறுதி பெரிது” என புகழாரம் சூட்டி இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் மதுபானங்களை கூடுதலாக விலை வைத்து விற்பது, கள்ளச் சரக்கு ஓட்டுவது இதெல்லாம் தியாகத்தில் வருகிறது. இதற்கு பெயர் தியாகம் என்றால், செக்கிழுத்து சிறைக்கு சென்றவர்கள், சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்கள் செய்ததற்கு பெயர் என்ன? செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது யார்? அவரை உள்ளே வைத்தது யார்? அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தீர்கள். அந்த வழக்கில் தான் அவர் உள்ளே போய்விட்டு வந்திருக்கிறார். செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பியது நீங்கள் தான். இப்போது அவரை வருக வருக எனவும், வீர தீர செயல்கள் என்றும் வரவேற்கிறீர்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.