
General
தவெக மாநாட்டில் நாம் தமிழர் கொடி பறக்கும்….. சீமான் கூறியதை கேட்டு ஷாக்கான விஜய் தொண்டர்கள்…!!!!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு தான் தற்போது தமிழக அரசியலில் பெரிய பேசுபொருளாக உள்ளது. இந்த மாநாட்டில் யார் யார் பங்கேற்க போகிறார்கள்? பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யாரெல்லாம் வருவார்கள் என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.

#image_title
இந்த நிலையில் விஜய்யின் மாநாட்டில் பங்கேற்பது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ள செய்தி பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் தவெக மாநாட்டில் பங்கேற்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், “நான் விஜய் மாநாட்டிற்கு செல்வதாக இருந்தால் என் தம்பிகள் என்னை தனியாக அனுப்புவார்களா? என் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் என்னுடன் வருவார்கள். மேலும் அவர்கள் எங்களுடைய கொடியை ஏந்தி வருவார்கள்.

#image_title
அதுமட்டுமல்ல நான் மேடை ஏறும்போது சீமான் வாழ்க என்று கோஷமிடுவார்கள். எனவே அது சரியாக இருக்காது. அது விஜய் நடத்தும் மாநாடு. அங்கு அவருடைய கொடி மட்டும் தான் பறக்க வேண்டும். எனவே நான் அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை” என கூறியுள்ளார்.