
General
மாட்டு மூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பை சாப்பிட மாட்டாயா…??? சீமான் பேச்சால் பரபரப்பு….!!!!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசிய பேச்சால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அதன்படி இதுகுறித்து சீமான் கூறியதாவது, “திருப்பதி லட்டு விவகாரத்தில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்தார்களோ அதை கண்டுபிடித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும். மாட்டில் இருந்து வரும் பால் மற்றும் நெய்யை சாப்பிடும் நீ மாட்டிலிருந்து வரும் கொழுப்பை மட்டும் சாப்பிட்டால் செத்து விடுவாயா? இவர்கள் ஒரு கோட்பாடு வகுத்து வைத்துள்ளனர். அதில் மாட்டுக்கறி சாப்பிடுபவன் கீழ்சாதி. மாட்டுப்பால் குடிக்கிறவன் இடைநிலை ஜாதி. மாட்டு மூத்திரம் குடிப்பவன் மேல் ஜாதி என்று கூறுகிறார்கள். மாட்டு மூத்திரம் குடிக்கும் நீ மாட்டின் கொழுப்பை சாப்பிட மாட்டாயா? இதுதான் அதிகப்படியான கொழுப்பு” என பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.