General
இதுதான் நாட்டின் வளர்ச்சியா…??? நிரூபர்களிடம் திடீரென கோபப்பட்ட சீமான்….!!!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் திடீரென கோபப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிரூபர் ஒருவர் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், “தமிழ்நாடு என்ன வளர்ச்சி அடைந்திருக்கிறது? முதல்வர் முக ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள படுக்கையில் அவரால் படுக்க முடியாதா? இது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அவரவருக்கு ஏற்றார் போல் மருத்துவமனையை தேர்ந்தெடுப்பார்கள் என அந்த நிரூபர் பதிலளிக்க மீண்டும் பத்திரிக்கையாளர் பதில் அளிக்க, பத்திரிகையாளர் மாதிரி பேசுங்கள். திமுக கட்சிக்காரர்கள் போல் பேசாதீங்க என சீமான் கையை நீட்டி கோபமாக பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.