General
என் தம்பிக்கு ஏன் உரிமை இல்லை…??? விஜய்க்கு ஆதரவாக பொங்கிய சீமான்…!!!
நடிகர் விஜய் சமீபத்தில் அவரின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார். அந்த கொடியில் யானை படம் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் யானை எங்களின் தேர்தல் சின்னம். எனவே கட்சிக் கொடியில் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “யானையை எந்த ஒரு தனி மனிதனும், கட்சியும், மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது. தேர்தல் ஆணையத்திடம் நான் புலி சின்னம் கேட்டேன். அது தேசிய விலங்கு என்றார்கள். மயில் கேட்டேன். தேசிய பறவை என்றார்கள். அப்படியென்றால் தேசிய மலர் தாமரையை மட்டும் ஏன் பாஜகவுக்கு கொடுத்தீர்கள் என்று கேட்டேன். சங்ககாலத்தில் நாம் யானைப் படை தான் வைத்திருந்தோம். நம் யானைப்படையை பார்த்து எதிரிகள் ஓடினார்கள். அப்படிப்பட்ட நாம் யானை படத்தை வைக்க கூடாதா? அந்த உரிமை என் தம்பிக்கு இல்லையா?” என விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.