General
சீமானுக்கு 11 கோடி ரூபாய் வழங்கிய சசிகலா…. முன்னாள் நாதக கட்சி நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு சசிகலா சுமார் 11 கோடி ரூபாய் வழங்கியதாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ராஜா என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். முன்னதாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜா தனியா புரட்சித் தமிழர் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நாம் தமிழர் கட்சியில் சீமான் மற்றும் அவருடன் இருக்கும் சில ஆதரவாளர்கள் மட்டுமே வளர்ச்சி அடைவார்கள். அடிமட்ட தொண்டர்கள் யாரும் வளர்ச்சி அடைவதில்லை. மேலும், கட்சித் தொண்டர்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் அவர்கள் தனது கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்று சீமான் கூறிவிடுவார். அதுமட்டுமல்ல சீமான் பல கோடி மதிப்பில் சொத்து சேர்த்து வைத்துள்ளார். உலகத் தமிழர்கள் திரள் நிதியின் மூலமாக அதிகளவு வருவாய் கிடைக்கிறது. அதில் சீமான் அவர் மனைவி மற்றும் மகன் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். மேலும், 2011ஆம் ஆண்டு சசிகலாவிடம் இருந்து சீமான் பணம் வாங்கினார். தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு தான் வேட்பாளர்களை அறிவிப்பார்” என குற்றம் சாட்டியுள்ளார்.