General
கடும் வறட்சி… வனவிலங்குகளை கொல்ல உத்தரவிட்ட அரசு…!!
தென்னாப்பிரிக்க நாடான நமீபியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பசியால் தவிக்கும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிப்பதற்காக வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாக பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வனவிலங்குகளில், யானைகளை தவிர்த்து, 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா என்றழைக்கப்படும் மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள் மற்றும் 100 எலாண்ட்ஸ் ஆகியவற்றை கொல்லவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, 157 விலங்குகளை கொன்று அதில் இருந்து சுமார் 63 டன் இறைச்சி கிடைத்திருப்பதாக அந்தாட்டு அரசு கூறியுள்ளது. மேலும் வனவிலங்குகளை வெறும் இறைச்சிக்காக மட்டும் கொல்லவில்லை. விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தண்ணீரும் தாவரங்களும் முக்கிய ஆதாரமாக உள்ளன. யானைகள் தாவர உண்ணியாக இருந்தாலும் அவை மனிதர்களை கொல்லக்கூடியவை. கடந்த ஆண்டு மட்டும் ஜிம்பாப்வேயில் யானை தாக்கியதில் 50 பேர் பலியாகினர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.