Television
மணிமேகலை ஓடிப்போய் திருமணம் செய்தது சரியா…?? ஷகிலாவின் கருத்துக்கு குவியும் கண்டனங்கள்….!!!
பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்த சண்டை குறித்து சோசியல் மீடியாவில் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதில் பெரும்பாலான மக்கள் பிரியங்காவையே விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஷகிலா இதுகுறித்து கருத்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் கூறியதாவது, “பிரியங்கா டைவர்ஸ் ஆனவர் என்று சிலர் அவருடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறார்கள். அப்படி என்றால் மணிமேகலை மட்டும் சரியா? மணிமேகலை அவருடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு ஓடிவந்து தானே கல்யாணம் பண்ணி இருக்கிறார். ஓடி வந்து கல்யாணம் செய்வது சமூகத்திற்கு ஒரு நல்ல உதாரணமா? இவங்களை உதாரணமாக காட்ட முடியுமா? நம்ம வீட்டு பெண்களை இதுபோல நீங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று யாராவது உதாரணமாக கூற முடியுமா? பிரியங்கா தப்பு என்றால் மணிமேகலையும் தப்புதான்” என கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.