Cinema
தமிழ் சினிமாவிலும் அதே நிலை தான்.. .பாலியல் தொல்லை குறித்து ஷகீலா கூறிய பரபரப்பு தகவல்….!!!
சமீபத்தில் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் மலையாள திரையுலகில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது. இந்த சூழலில் பிரபல நடிகை ஷகீலா தமிழ் திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் கூறியதாவது, “மலையாள திரையுலகில் இருப்பது போலவே தமிழிலும் இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக தெலுங்கில் இதைவிட அதிகமாகவே உள்ளது. இவை அனைத்தும் ஏற்கனவே பேசி வைத்து தான் நடக்கும். ஆரம்பத்திலேயே ப்ரொடியூசருக்கும், தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்கு ஒப்புக்கொண்டு தான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். ஆண்களுக்கு கண்டிப்பாக ஒரு வார்னிங் கொடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.